Tuesday, October 14, 2008

ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!





மக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய
ஒரு குறிப்பு

மாரி மகேந்திரன்

01

ஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான ,ருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் ,ரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.
ஜோன் ஆபிரஹாம் என்ற ,ந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது "சலனம்' என்ற திரைப்பட ,தழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் ,ருந்த கேசவன் புத்தக நிலையத்தில் "சலனம்' என்ற ,ரு மாத சினிமா சஞ்சிகையை பார்த்து ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம் பற்றிய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் ,வர் யாராக ,ருக்கக் கூடும் என்பதை புரியாமல் ,து புனை கதையாக ,ருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (ழுனநளளய) மக்கள் திரைப்பட ,யக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில் திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி. சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி. சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை தொடர்ந்து கொண்டு செல்கிறார்.
ழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். ,ப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில் காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான "ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட ,யக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் ,ணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;,னி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.
ஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். ,ன்னும் அவரின் நினைவுகளில் ,ருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் ,தயம் ,றுக்கமாக கட்டுண்டு கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட விழாக்களில் மலையாள திரைப்பட ,யக்குனர்களான ஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் ,ப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு ,ல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (""நிறம்'' திரைப்பட ,தழில் ,வர் பற்றி படிக்கலாம்) சொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா "ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!' என்று எழுதியுள்ளார்.

02

1937 ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஜோன் ஆபிரஹாம் பிறந்தார். ,னி ஜானைப் ஜானே சொல்வதை கேட்போம்.
என்னுடைய ஊர் குட்ட நாடு. ஆனால் நான் பிறந்தது குன்னங்குளத்தில் விடுதலைக்கு முந்தையஅந்தப் பொழுதில் என் அப்பா தலைமறைவு அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
என் குழந்தைப் பருவமும் ஆரம்பக் கல்வியும் குட்ட நாட்டில் கழிந்தது. பள்ளி ,றுதியை அடையும் முன் பதினொரு பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. எனக்கு விருப்பமானது ,லக்கியம் என்றாலும் கோட்டயம் சி.எம்.எஸ். கல்லு}ரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றேன். பின் தார்வார் பல்கலைக்கழகத்தில் அரசியலை முதுகலைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதை முடிக்கும் முன் ஃ.ஐ.,. யில் வேலை கிடைத்ததால் கோயம்புத்து}ருக்கு வந்துவிட்டேன்.
கல்லு}ரியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே அரசியலில் நான் தீவிரமாக ஈடுபட்டேன். தேர்தலில் நான் தனியாக நின்றும் வெற்றி பெற்றிருக்கிறேன். உண்மையில் எனது அரசியல் எனது தகப்பனõருடைய அரசியலின் சாயலாகத்தான் ,ருந்தது. உள்ளூர்த் தொழிலாளர்களின் து}ண்டுதலால்தான் நான் அரசியலில் கால் ஊன்றுவதற்கு முக்கிய காரணம். மார்த்தோமா கல்லு}ரியில் ஆர்ட்ஸ் கிளப் செயலாளர் பதவிக்காக நடைபெற்ற கடும் போட்டியில் கோட்டயத்தைச் சேர்ந்த எதிர்வேட்பாளரை வெற்றி கொண்டேன்.
எங்களுடையது ஒரு நடுத்தர வர்க்க சாதாரணக் குடும்பம். மத விவகாரங்களில் அனைவருக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு. ,ருப்பினும் எனக்கு கோவில்களுக்குச் செல்வதில் ஆர்வம் ,ல்லை. என் அப்பாவின் நிர்ப்பந்தம் காரணமாக பத்துப் பதினைந்து வயது வரை எப்பொழுதாவது போய்க் கொண்டிருந்தேன்.

ஐந்து வயதிலிருந்தே திரைப்படம் பார்க்கத் துவங்கிவிட்டேன். ஒரு நல்ல பாடகனாக வேண்டுமென்ற விருப்பமிருந்தாலும் ஒரு திரைப்படக் கலைஞனாக வேண்டுமென்பதே எனது ஆழ்மனதில் படிந்து கிடந்த ஓர் அபிலாஷை. குழந்தைப் பருவத்திலிருந்தே ,ப்படி ஓர் எண்ணம் என் மனத்திலோ, நனவிலோ மனத்திலோ ,ருந்திருக்கலாம். என்றாவது ஒரு நாள் சினிமா எடுப்பேன் என்று அன்றே என் நண்பர்களிடம் நான் கூறியதுண்டு. காரணம், என்னுடைய தாத்தா.

தாத்தாதான் என் குரு. அவர் ஓர் ஓய்வுபெற்ற ,ன்ஜினியர். அவரிடம் போட்டோகிராஃபி மற்றும் சினிமாவைப் பற்றிய நிறைய நு}ல்களும், ஒரு பழைய மூவி கேமராவும் ஒரு புரொஜக்டரும் ,ருந்தது. அவருடைய புத்தகங்களையெல்லாம் என்னை வாசித்துக் காட்டச் சொல்வார். அதற்குக் காலணாவோ, அரையணாவோ கொடுப்பார். அவர்தான் எனக்கு சினிமா பார்க்கக் கற்றுத் தந்தார். உண்மையிலேயே அவர் ஒருமேதை. ,ன்று அவருடைய திறமையில் கால் பங்குக் கூட என்னிடம் ,ல்லை. அவருடைய பெயர்தான் எனக்கும் என் முழுப் பெயர் ஜேக்கப் ஜான்.

1965 ல் பூனா திரைப்படக் கல்லு}ரியில் சேர்ந்தேன். திரைப்படக் கல்லு}ரியில், பழக்கப்படாத வேறுவித சினிமாக்களைப் பார்த்தபொழுது முதலில் எல்லோரையும் போல் எனக்கும் குழப்பம் தான் உண்டானது. காலப் போக்கில் அதுவரை என்னிடம் திரைப்படம் குறித்த கருத்தாக்கங்களை எல்லாம் அடியோடு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு திரைப்படத்தைக் காணும்போதும் புதிய அனுபவங்களும் சிந்தனைகளும் உருவாவதுண்டு. ,ங்மர் பெர்க்மன், அந்தோணியானி, லு}யிபுனுவல், குரோசவா... ,ப்படி மேதைகளின் படங்களையும் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு தடவை கூட, அப்படிப்பட்ட திரைப்படத்தை ,மிடேட் செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நான் புதிதாக எதையாவது படைக்க விரும்பினேன். அதுவே அன்று எனக்குப் பெரும் பிரச்சினையாக ,ருந்தது. அதாவது நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிருந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு?

03

ஜோனின் சினிமாவின் உயிர்ப்பு. ,ந்த ,டத்திலிருந்துதான் தனித்துவம் கொண்டதாக பரிணமிக்கின்றது. அவரின் ,ந்த தனி வழி பயணம் தன்னுடைய அத்தனை சுயமான நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்த துவங்கியிருக்கின்றது. அவரின் ,ந்த தனித்துவமான தனக்கேயுரிய பயணம் அவரின் அன்றாட நிகழ்வுகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது தனது கலை மனதை எந்தவிதமான வியாபார சு10தாட்ட நிர்பந்தத்திற்கும் சமரசம் செய்யாமல் மிகவும் கடினமானதொரு வாழ்வுக்கு தன்னை உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார். அவரின் சினிமா வேட்கை வாழ்க்கையை, சமூகத்தை அன்றாடம் நிகழும் சராசரி பொழுதின் மேல் கோபமாக வீசுகின்றது. போலிகளற்ற அவரின் து}ய ஆத்மா ,ந்த பிசாசுகளின் கூடாரத்தோடு போராட முடியாமல் திணறுகின்றது.அந்த திணறலின் உள் வலிதான் ஜோன் ஆபிரஹாம். அதனால்தான் அவரை அவர் வாழ்ந்த காலத்தை சக படைப்பாளிகளும் நண்பர்களும் முரண்பாடுகள் புதைந்த மனிதனாக பார்க்க செய்துவிட்டது.

"ஜடமாயிருக்கப் பழகிவிட்ட சமூகத்தில்
சுரணையுள்ளவன் படும்பாடு மனநிலை
பாதிக்கப்பட்ட வாழ்வாக மாறினால்
ஒழிய மாளாது என்றே உள்ளோடுகிறது
உயிர் நடுக்கம்'

என்று கவிதா சரண் என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் எழுதியிருந்த அர்த்தபூர்வமான குறிப்பை ஜோனின் துயரமான நெடிய வாழ்வுடன் பொருத்திப் பார்க்க தோன்றுகின்றது.

ஜோன் சினிமாவை ஆத்மாவின் பகுதியாகவே நேசித்தார். சினிமாவை வர்த்தக சு10டாட்டத்தின் வியாபார மலிவான சரக்காக பார்க்க தெரியவில்லை. மக்களின் வாழ்வுக்கும் புத்திக்கும் சினிமா என்பது ஏதாவது செய்ய வேண்டும் எனது கனவு கண்டவர்களில் ஜோனும் ஒருவர். ஜோனின் கனவு அனைவரையும் விட சிறிது கடினமானது. சினிமாவை ,த்தனை உணர்வுபூர்வமாக நேசித்தவர்களை உலக சினிமாவில் கூட காண முடியாது.

"எனது சக மனிதர்களுடன் தொடர்புகொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம்தான் சினிமா' கேமராவின் மொழியே திரைப்படம். ,ந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகிறது. கலைப்படைப்பு என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையைத் தேடுவது. திரைப்படமும் பிற எந்தக் கலையையும் போலவே மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும் அந்தக் கடமையைத்தான் மேற்கொள்கிறது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும் காட்சியம்சங்களை வைத்துக் கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை, அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளம் அதாவது பார்வை (ஏளைழைn) உருவாக வேண்டும். எனது திரைப்படம் என்று சொன்னால் அது எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள், எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை. அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னைப் பார்க்கிறேன். நான் பார்ப்பது ,ன்னொருவர் பார்ப்பது போலல்ல, யதார்த்தங்களின் உண்மையை அல்ல, உள்முகமான உண்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன் யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே என்னுடைய தேவை.

04

ஜோன் ஆபிரஹாமை நாம் புரிந்து கொள்வதென்பது ஆசாத்தியமே. ஏனென்றால் அவரின் திரைப்படங்களை நாம் பார்ப்பதற்கோ விவாதிப்பற்கோ ,ங்கே எந்தவிதமான சு10ழலும் ,ல்லை, அனைத்து ஊடகங்களிலும் வணிக சினிமாவின் செய்திகள்தான் பேயனெ கலந்திருக்கின்றது. நல்ல சினிமாவை தேடும் நம் சமூகத்தின் படிப்பாளிகளும் ரசனையாளர்களும் ,ந்த ஊடகங்கள் திணிக்கும் பொய்களையே திரும்ப திரும்ப படிக்க வேண்டியுள்ளது. ,து நமக்கும் நம் சந்ததிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் காலத்தின் துயரம். நல்ல சினிமாவை தேடும் ஒரு தலைமுறையின் பசியை தீர்க்க ,ங்கு நம்மிடம் எதுவுமே ,ல்லை. என்பது நமது துயரமே. அதனால் ஜோன் ஆபிரஹாம் போன்றவர்களைப் பற்றிய தேடலை ,ப்படிதான் எழுத வேண்டியுள்ளது.

""1969 ல் கல்லு}ரியிலிருந்து வெளிவந்த பின் முதல் முறையாக மணிகௌலுடன் உஸ்கிராட்டியில் வேலை செய்தேன். அது ஒரு பெரிய அனுபவமாக ,ருந்தது. அதன் உள்ளடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ,ந்தி நாடகாசிரியரான மோகன்ராகேஷின் கதை அது. டில்லியில் ,ருக்கும்பொழுது நானும் மணிகௌனும் சேர்ந்து திரைக்கதையைத் தயார் செய்தோம்.
அப்பொழுது ,மயமலைøயப் பற்றி ஃபிலிம் டிவிஷனுக்காக ஒரு டொக்குமெண்டரி ,யக்கும் வேறு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உண்மையில், அதை ,யக்கிக் கொண்டிருந்தவருக்கு விபத்து நேர்ந்ததால் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதுதான் என்னுடைய முதல யுளளபைnஅநவெ;.
உஸ்கிரொட்டி திரைப்படத்திற்கு பின் சென்னை வந்தேன். ஆஸாத், கே.ஜி. ஜார்ஜ், பாலு மகேந்திரா முதலிய திøரப்படக் கல்லு}ரி தோழர்கள் அனைவரும் ஒரு லாட்ஜில் தங்கினோம். அப்பொழுதுதான் வித்யார்த்திகளே ,திலே, ,திலே' என்ற படம் துவங்கியது. ஆஸாத்தான் அதற்குக் காரணம், அதற்குப் பின் ""ஜோசப்' என்ற புரேகிதன்' என்ற திரைப்படத்திற்குத் திட்டமிட்டோம். நானும் சக்கரியாகவும் சேர்ந்து சினிமாவுக்காக எழுதிய கதை அது. அதன் திரைக்கதை வேலைக்காக கோயம்புத்து}ரில் தங்கியிருந்தபோது, "அக்ரஹாரத்தில் கழுதை' யின் கரு முதன் முதலாக எனக்குத் தோன்றியது. ஒரு மாலையில் சக்கரியாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். நிறைய பிராமணர்கள் தங்கியிருந்த ஓர் அக்ரஹாரம் வழியாக வந்தபொழுது நிறைய கழுதைக் குட்டிகளைப் பார்க்க அழகாயிருந்தது. நாங்கள் அகதைப் பற்றி பேசியவாறே நடந்தோம். எத்தனையோ வகையான மிருகங்களை மக்கள் வளர்க்கிறார்கள். ஆனால் ஒரு கழுதைக் குட்டியை யாரும் வளர்ப்பதில்லையே என்று யோசித்தேன். அக்ரஹாரத்தில் ஒரு பிரமாணன் கழுதை வளர்த்தால் என்னவாயிருக்கும் நிலைமை? அங்குள்ள பிராமணர்களுடைய வாழ்க்கையை நான் நன்கறிவேன். அப்படி ஒரு சு10ழலில்தான் "கழுதை' யை உண்டாக்கினேன், "கழுதை' துவக்கம் முதல் முடிவுவரை முழுமையாக என் படைப்பாக ,ருந்தது.
1978 ல் "அக்ரஹாரத்தில் கழுதை' வெளிவந்தது. படத்தை நான் பார்த்தபோது கதையை ,ன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று தோன்றியது. பொருளாதாரப் பற்றாக்குறையினால் நினைத்தபடி சிலவற்றை திரைக்குக் கொண்டுவர முடியவில்லை, தொழில்நுட்பத்தை அலசும்போது பல குறைபாடுகள் ,ருக்கும். ஆனால் அது எதுவுமே சினிமாவின் சாரத்தினை வெகுவாகப் பாதிக்கவில்லை. அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் ,ந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் மிகவும் நல்ல பிராந்திய திரைப்படம் என்ற விருது "கழுதை'க்குக் கிடைத்தது. அதுவும் ,தற்கு ,ன்னொரு காரணம் உண்மையில் எந்த சமுதாயத்தையும் அதில் விமர்சிக்கவில்லை, பிறகு அவர்களுக்கும் ,து சரியெனப்பட்டது. தமிழ்நாட்டில் அதைத் திரையிடுவதற்கான சந்தர்ப்பம் நழுவிப் போனது. "ஜனசக்தி பிலிம்ஸ்' அதை விநியோகத்திற்கு எடுத்துக் கொண்டது. அவர்கள் அதை தமிழ்நாட்டில் திரையிட வேண்டிய கட்டாயமிருந்தது. ஆனால் அவர்கள் அதற்கு முனையவில்லை. படமெடுத்தால் மனிதர்களுக்குக் காட்ட வேண்டும் என்பது மேலான தர்மம். என்னுடைய படத்தை (அக்ரஹாரத்தில் கழுதை) மக்களிடம் காட்டினால் மக்கள் அதை விரும்பவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் அமிதாப்பச்சனையும் எம்.ஜி. ஆரையும் மட்டும் பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ரசனை மலினப்படுகிறது. நாம் ,ப்பொழுது நல்ல படங்களைப் பார்க்கத் து}ண்டுவோம். ,துவரையிலான முறையை மறுக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் படங்கள் நாலோ ஐந்தோதான். அறிவுஜீவிகளுக்காக மட்டும் எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை அறிவுபூர்வமான சுய ,ன்பம் என்னால் ,தை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் புரிந்து கொள்வதற்காகத்தான் படம். மனித வாழ்க்கையுடன் அவை நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதாகவும் ,ருக்க வேண்டும்.''

05


ஜானின் "அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படத்தின் கடைசி பிரதி ஏ.வி.எம். நிறுவனத்திலிருந்து மக்களிடம் அப்படம் சென்று சேர கூடாது என்கிற வஞ்ச நோக்குடன் தீக்கிரையாக்கப்பட்ட செய்திகளோடு ஜோன் ஆபிரஹாம் பற்றிய செய்திகளையும் நல்ல சினிமா பற்றிய விபரக் குறிப்புகளையும் தமிழக வெகுசன ,தழ்கள் செய்திகள் கூட வெளியிடுவதில்லை என்பதிலிருந்து சினிமாவின் அரசியல் எப்படியான நலத்தை காப்பாற்றி வருகின்றதென்பதை நம்மவர்களும் புரிந்து கொள்ள முனைய வேண்டும்.
ஜோன் ஆபிரஹாமின் தனித்துவம் அவர் கூறியதுபோல்,
"நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு.
என்பதாக அவரின் தேடல் ஒரு புதிய சினிமாவுக்கான தேடலுடன் வாழ்வை அர்ப்பணித்தார். முரண்பாடுகளும் வஞ்சனைகளும் பொய்களும் போலிகளும் நிறைந்த வாழ்வை அவரால் எதிர்கொள்ள முடியாது போகின்றது. நாடோடி தனமான வாழ்க்கையும், சமூகத்தின் மேலிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த முரண்பட்ட ஆளுமையை அவர் தனது சராசரி வாழ்வொன்றின் மேல் பிரயோகிக்கிறார். அவரோடு அவரின் திரைக்கதைக்கு பணிபுரிந்த வெங்கட் சாமிநாதன் அவரைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. ஆனால் அவரே ஒரு ,டத்தில் ,ப்படி எழுதியிருக்கின்றார்.
"அவரின் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கங்களும் தன்னிச்சையான பொறுப்பற்ற நடவடிக்கைகளும் அவரது நண்பர்களை சில நேரங்களில் கோபமூட்டியது உண்டு. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு குறும்புப் புன்னகையுடன் வழக்கம்போல ,ருப்பார். நடைமுறை உலகத்தோடு ஒத்தோட முடியாத அவரது ,யலாமை நிஜம். ஜானின் நேர்மை சந்தேகத்திற்கிடமில்லாதது.'
ஜானின் நேர்மை மக்களின் துயரம் சார்ந்தது. மக்களின் விடுதலையை தனது படைப்புகளின் வழி தேடியவர் ஜான். ஜான் காசுக்கும், புகழுக்கும் பணத்திற்கும் கடுகளவு கூட ஆசைப்படாதவர். அவர் சமூகத்தின் உண்மையை தனது படைப்பின் மூலம் கண்டறிவதிலும் விடுதலையை தேடிய ஆத்மீக கலைஞன் ஜான்.

உலக திரைப்பட மேதைகளிடம் யாரிடமும் ,ல்லாத பண்பு ஜானிடம் ,ருந்தது. அது "அம்ம அறியான்' என்ற திரைப்படம் உருவான விதம் ,ந்திய சினிமா வரலாற்றில் ,துவரை செய்திராத புதிய முயற்சி ,த்திரைப்படம். அதன் உள்ளார்ந்த ,சையை போல் ஜானின் ஆளுமையை வெளிப்படுத்தினாலும் அத்திரைப்படத்திற்காக ஜான் மக்கள் மீது தான் வைத்திருந்த அபரிதமான நம்பிக்கை. நல்ல சினிமாவை சாதாரண மக்களிடம் எடுத்து சென்ற விதம், அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எளிய மக்களின் துயரத்தை தேடிய ஆன்மா, "அம்மா அறியான்' திரைப்படம் எடுக்க, கேரளத்தின் வடக்கு முதல் தென்கோடி வரை சுவரொட்டி ஒட்டி, தமுக்கடித்து, பொதுமக்களிடம் பணம் திரட்டி படம் எடுத்த முறையை தமிழர்கள் அறிய வேண்டும் என்கிறார் நிழல் சினிமா சஞ்சிகையின் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு. ,ந்திய சினிமாவில் ,ப்படியான விதி விலக்கான புதிய வழியை கண்டறிந்து அதில் தனது மகத்தான பெயரை நிரப்பியவர் ஜான்.
,ன்று நம் சு10ழலில் திரைப்படத்திற்கான பொருளாதாரத்தை பேசுகின்றோம், ஆனால் ஜான் பொது மக்களிடம் கையேந்தி பணம் வசு10ல் செய்து ஒரு அற்புதமான படைப்பை முற்றிலும் புதிய மொழியில் உருவாக்கியவர் ஜான் ஆபிரஹாம்.
"அம்ம அறியானைப் போன்ற திரைப்பட வடிவமும் ,ந்திய சினிமாவில் ,துவரை ,ல்லை. ,வ்வேளையில்தான் நாம் ஜோன் ஆபிரஹாமின் ஆளுமையினையும் ஒட்டுமொத்த சிந்தனையினையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது' என்கிறார் ஆர்.ஆர். சீனிவாசன்.
தன் மனசாட்சிக்கு சரி என்பதற்காக அவரின் பயணம் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் ஜோன் ஆபிரகாம் போல் தனது சினிமாவை ,த்தனை ஆழமாக அன்பு செலுத்தியவர்கள் குறைவுதான். சினிமாவை வாழ்வின் பகுதியாகவும் விடுதலையின் குறியீடாகவும் கண்டவர் ஜோன் ஆபிரஹாம்.


06

""1970 ல் வெளியான எஸ்பினோசா எழுதிய "நேர்த்தியற்ற சினிமாவிற்காக' (குழச வாந ஐஅpநசகநஉவ ஊiநெஅய்) என்ற அறிக்கையில், ",ன்றைய நேர்த்தியான சினிமா' வானது தொழில்நுட்ப ரீதியிலும் அழகியல் உணர்வுகளிலும் சிறப்பான தன்மையைப் பெற்ருக்கிறது. ஆனால் ,து மிகவும் பிற்போக்கான சினிமாவாக உள்ளது' என்கிறார். ,தற்கான காரணங்களையும் நியாயங்களையும் விளக்கும் எஸ்பனோசா
"மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி பெறும் பொருளாதார முன்னேற்றத்தில் வணிகத் திரைப்படத்தின் உற்பத்திகளுக்கு நேரிடும் பண விரயமானது முட்டாள்தனமானது என்கிறார். ,து கேரளத்திற்கும் தமிழகத்திற்கும், ஏன் ,ந்தியா முழுமைக்கும் பொருந்தும். 1981 ல் பண முதலீட்டைப் பொறுத்தவரை திரைப்படத் தொழிற்சாலைகள், தொழிற்சாலை வகைகளில் நான்காவது ,டத்தைப் பெறுவதாக ,ந்தியாவில் கணிக்கப்பட்டது. "தொழில்நுட்ப அழகியல் நேர்த்தி நமக்குள் உருவாக்கும் மனநிலையானது என்னவெனில் செவ்வியல் பூர்ஷ்வா கதையாடல் குணாம்சங்களைத்தான். ,ந்த முரண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்கவும், ஜடம் மாதிரி அமர்ந்திருக்கும் ரசிகர்களை விழிப்படையச் செய்யவும் நமக்குப் "புதிய சினிமா' தேவைப்படுகிறது. ,ந்திய "புதிய சினிமா' வானது ரசிகர்களை கற்பனையான தளத்திற்குள்அவர்களை சுவீகரித்துக் கொண்டு சமூகத்தின் யதார்த்தத்திற்கு ,ட்டுச் செல்கின்றது. ,ந்தத் திரைப்படங்கள் ரசிகர்களின் தீவிரப் பங்கெடுப்பின் தன்மையில்லாமல் முழுமையடையாது' என்கிறார் எஸ்பினோசா. குறிப்பிட்ட சிறு குழுவினர்கள் படம் எடுத்து கோடிக்கணக்கான மக்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற நியமங்கள் உடைக்கப்பட வேண்டும். படம் எடுக்கும் தொழில்நுட்பக் கருவிகள் மக்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும். ,தன் மூலம் வெகுசனக் பொய்க் கலை களையெடுக்கப்பட வேண்டும். உண்மையான வெகுசனக் கலை உருவாக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கில் அழகாக படம் எடுத்து மக்களை ஏமாற்றம் கூட்டத்திற்கு எதிராக குயவன் மண் பானையைச் செய்வதுபோல மிகக் குறைந்த பண முதலீடுகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ,துவே ஒடேஸ்ஸா ,யக்கத்தினரின் நோக்கமாகவும் ,ருந்தது.


நம்முடைய வீட்டை நாமே கட்டிக் கொள்வது போல நமக்குத் தேவையான திரைப்படங்களை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் "நல்ல சினிமா' உருவாவதற்கு மக்களும் திரைப்படத் தயாரிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்; ,து முற்றிலும் புதிய சினிமாவை உருவாக்கும் என்பது ஜான் ஆபிரஹாம் மற்றும் அவர்களது ,யக்கத்தினரின் சிந்தனை. வெகுசன திரைப்படங்களைப் பற்றி வெகுவாகவே விவாதித்தாயிற்று. வணிகமும் நல்ல திரைப்படமும் ,ணையாதா? ,ந்தியாவில் ,ன்னும் சாப்ளின், ஹக்ஸ், ஃபோர்டு மற்றும் கப்போலோ போன்று கலையையும் வணிகத்தையும் சரியாக ,ணைத்து வெற்றி பெற்ற ,யக்குனர்கள் ,ல்லை. நமக்கு "உலக சந்தை' யை நோக்கிய எண்ணம் ,ல்லாமலிருப்பதும் ,தற்குக் காரணமாக ,ருக்கலாம். ,ந்நிலையில் "நல்ல சினிமா' வெகுசன சினிமாவாக மாற வேண்டும், என்பதே ஜோன் ஆபிரஹாமுக்கும் அவரது ,யக்கத்தினருக்கும் நோக்கமாக ,ருந்தது. "அம்ம அறியான்' வெகுசன மக்களை அடைய வேண்டம் என்ற முன் முடிவுடனே உருவாக்கப்பட்டது.அதில் வெற்றியும் பெற்றது எனலாம். ,ரண்டாயிரத்திற்கும் அதிகமான திரையிடல்கள் கேரளத்தின் அனைத்துக் கிராமங்களையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்டது. நல்ல சினிமாவைப் பார்ப்பதன் மூலம் உழைக்கும் வர்க்க மக்கள் வணிக சினிமாவுக்கு மாற்றான ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்பினார் ஜோன். அதேவேளையில் வழக்கமான அரசு மான்யம் பெற்று தயாரிக்கப்பட்டு யாரையும் சென்று அடையாமல் ,ருக்கும். "கலைச் சினிமா' வுக்கு எதிரான ஒன்றாகவும் ,ருக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்டது. அம்ம அறியான் 75 பேர் கொண்ட குழு மக்களிடம் 1 ரூபாய், ,ரண்டு ரூபாய் பெற்று 16 ட்ட் கேமராவுடன் (ஒளிப்பதிவாளர்ஃ வேணு) வய நாட்டிலிருந்து கொச்சின் வரை பயணம் செய்து கேரளத்தின் அரசியல் வரலாற்றோடு ,ணைந்து உருவாக்கப்பட்டது. பொது மக்கள் பணம் கொடுப்பது மட்டுமல்லாமல் படத் தயாரிப்பிலும் ஆங்காங்கே தாங்களாகவே ஈடுபட்டனர். திரைக்கதை, வசனம் அனைத்தும் அங்கங்கே விவாதிக்கப்பட்டு, ,ட்டுக் கட்டப்பட்டு, எழுதப்பட்டு படம் பிடிக்கப்பட்டது. தொழில் முறை நடிகர்களும் அதிகம் ,தில் நடிக்கவில்லை.
படம் முடிக்கப்பட்டு கேரளமெங்கும் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது. டில்லியில் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. தேசிய விருதும் பெற்றது. வெளிநாடுகளிலும் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. ஒரு பகுதியினர் "அம்ம அறியானை' வெகுவாகப் புகழ்ந்து தள்ளினர். ,ன்னொரு பகுதியினர் ஜோன் ஆபிரஹாமுக்கு திரைப்படத்தைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சரியாக ,ல்லை, சினிமாவின் அடிப்படையான அழகுணர்ச்சி கொஞ்சம் கூட ,ல்லை. ஒளிப்பதிவு சரியாக ,ல்லை, டாக்குமெண்டரி மாதிரியிருக்கிறது. படத் தொகுப்பு சரியாகச் செய்யப்படவில்லை, திரைப்பட விழாவில் திரையிடும் அளவிற்குத் தகுதியில்லாத படம், மொத்தத்தில் நேர்த்தியில்லாத திரைப்படம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.


07

நேர்த்தியற்ற சினிமாவின் அரசியல் என்ற குறிப்பில் ஆர்.ஆர். சீனிவாசன் எழுதும் ,ந்த விடயத்தோடு, ஜோன் ஆபிரஹாமின் ஒடேஸ்ஸா திரைப்பட ,யக்கத்தின் பணிகளும், அர்ப்பணிப்பும் கேரள சினிமாவின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் திரைப்பட அரங்குகளின் வேலைத்திட்டத்தை ஜோன் போல் வேறொருவர் திøரப்பட வரலாற்றில் மேற்கொண்டதில்லை, மாற்றுத் திரைப்பட கலாசாரம் ஒன்றை மிகவும் வலுவுடன் கட்டியெழுப்பியவர் ஜோன் ஆபிரகாம்.

ஜோன் ஆபிரஹாமின் சினிமா மொழி தனித்துவமானது. ,தை குறித்தும் சினிமா பற்றியும் அவர் கூறுவதை அவர் மொழியில் கேட்போம்;
எனது சக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம் தான் சினிமா. காமிராவின் மொழியே திரைப்படம். ,ந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகின்றது. கலை படைப்பு என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையை தேடுவது திரைப்படமும் பிற எந்தக் கலையையும் போலவே மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும் அந்தக் கடமையைத் தான் மேற்கொள்கின்றது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும் காட்சியங்களை வைத்து கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை. அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளமும் அதாவது பார்வை ((ஏளைழைn) உருவாக வேண்டும்.
எனது திரைப்படம் என்று சொன்னால் அது எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை. அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னை பார்க்கிறேன். நான் பார்ப்பது ,ன்னொருவர் பார்ப்பது போலல்ல. யதார்த்தங்களின் உண்மையாய் அல்ல, வன்முகமான வன்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன் யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே எனது தேவை.

சினிமா ஒரு கட்டுக்கலை அல்ல. ஜான் ஆபிரஹாம் ,யக்கிய சினிமா, ஜாஜ் ஆபிரஹாமின் சினிமாதான். முடிவெடுப்பது நான் தான். திரைப்பட தயாரிப்பின் ஒளிப்பதிவு, ,சை, நடிப்பு முதலிய தொடர்புகளின் படைப்பு ரீதியான தேவையை நான் ஏற்று கொள்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை கேட்பதுண்டு. ஆனால் அவர்கள் எனக்காக தான் பணி புரிகிறார்கள். எனது கருத்துக்களின் வெளிபாட்டுக்காகவே அவர்கள் கேமராவை ,யக்குகிறார்கள்; நடிக்கிறார்கள். அங்கே சமரசங்களில் பிரச்சினையே கிடையாது. அவர்களின் ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது அவை எனது படைப்புக்கான அவர்களின் பங்களிப்புகள். அதுதான் படைப்புத்திறன். சினிமா என்பது ஒளிப்பதிவு தான். ஆனால் நான் தான் முதலில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறேன். எடிட் செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் ஒத்துழைக்கிறார்கள். தொழில்நுட்ப திறமையாளர்களான அவர்கள் கலைஞர்களாக ,ருந்தால் எனது கற்பனையைப்புரிந்து கொள்ள ,யலும். நடிக, நடிகையர்களின் விஷயம் பெரிய பிரச்சினையல்ல. பிரேம் நசீரை வைத்து நான் படமெடுக்கலாம். பத்து பாடல்களுள்ள படம் எடுக்கலாம். ஆனால் அது என்னுடையது மட்டுமேயான படமாக ,ருக்கும். ,யக்குனர் மடையனாக ,ருந்தால் மட்டுமே திரைக்கதை ஆசிரியரின் சினிமாவாக மாறும். ,யக்குனரின் திறமையின்மையால் தான் திரைக்கதை மட்டுமே வெற்றி பெறுகின்றது. நான் என்னை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே படம் எடுப்பதில்லை. செல்ஃப் எக்ஸ் பிரஷன் ,வர் ??? பேஷன், ,துவே எனது கண்ணோட்டம். ஆண் பெண் உறவு மூலமே படைப்பின் நிறைவு ஏற்படும் என்று சொல்வது போலவே கலை முழுமையடைய வேண்டுமானால் சமூகக் கண்ணோட்டத்துடன் எனது கருத்தும் ,ணைய வேண்டும். ஐ யஅ ய ளுழஉயைட டிநiபெ; சமூகத்தில் தனிமைப்பட்ட எந்த ,ருப்பும் ,ல்லை. என்னைப் பொகுத்தவரை, கலைஞன் என்ற தனிநபர் உணர்வுள்ள சமூக உறுப்பினர் என்பதை கடந்து எதுவும் ,ல்லை.
சமூகப் பார்வை ,ல்லை என்றால் நான் எதுவும் ,ல்லை. சமூக வீதியின் பாகமாக ,ருந்தால் மட்டும் தான் என்னால் எதைப் பறியாவது சிந்திக்க முடியும். மக்களின் நன்மைக்காக ஏதாவது செய்தால் அவன் மனிதன் என்று அவனுக்கு உணர்வூட்ட வேண்டும். அதுவே எனது நோக்கம். மக்களிடம் சில உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும் போது தான் நான் படைப்பாளியாகிறேன், சினிமா எடுக்கிறேன். சினிமா கலாபூர்வமானது என்றால் அதை மக்கள் ஆதரவு (Pழிரடயச ) பெற்றதாக மாற்ற வேண்டும் என்பது எனது நம்பிக்கை. எனது படத்தை மக்கள் பார்க்க வேண்டும். அதை எல்லா அர்த்தங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு பிடிவாதம் ,ருக்கிறது. டீக்கடையில் டீ குடித்ததற்காக தகப்பனாரிடம் அடி வாங்கியவன் நான். அது போன்ற சு10றரான ,யல்புள்ள ஒரு நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த நான் உண்மையான கம்???? ,ருக்க விரும்புகிறேன்.


08

""நேர்த்தியில்லாத திரைப்படம்'' என்பது பாசாங்குகள் எதுவும் ,ல்லாத சராசரி மனிதனின் கதையை பேசும் சக்தி கொண்டது. சாமõனியனின் தன்னிச்சையான சினிமாதான் அது. அது போலியான மாயாஜால பிரமாண்டங்களிலும் கிராஃபிக்ஸ் வித்தைகளிலும் ஈகூகு சவுண்ட் என்கிற மனதை நினைவுகளை பிடுங்கி திங்கும் போலி கலை படைப்புகள் போன்றதல்ல அது. மக்களின் கண்ணீரையும் வேதனையையும் உண்மையையும் தேடும் தியான ஊடகம், ஆனால் மக்கள் தனது துக்கத்தையும் வேதனையையும் திரையில் பார்ப்பதற்கு தயாரில்லை' என்ற குற்றச்சாட்டு கூட உண்மையானதல்ல, நல்ல சினிமாவை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்கிற வியாபாரிகளின் கூற்றில் எந்தவிதமான உண்மையும் ,ல்லை, மூன்று மணி நேரம் மக்களை வசீகரிக்கும் ,ச் சினிமாக்கள் முழு வாழ்வையும் ஏமாற்றுகின்றது என்பதை மக்கள்தெரிந்து வைத்திருக்கிறார்கள். மூன்று மணி நேரம் மட்டும் மக்கள் தன் சொந்த பிரச்சினையை மறந்து திரையில் லயித்திருக்கிறார்கள் என்பதற்கான அர்த்தம் மக்களின் தப்பிதல் மனோ நிலை மட்டுமல்ல, சினிமாவின் அற்புதம்தான் அது, அதனால்தான் தரமானது எதுவானாலும் மக்கள் ரசிப்பார்கள், நல்ல சினிமாவை நமக்கும் மக்களுக்கும் நாம் ,ன்னும் ரசிப்பதற்கான சு10ழலை ஏற்படுத்தவில்லை, அப்படி நல்ல சினிமாவை மக்கள் ரசிக்க தொடங்கி விட்டால் ,ங்கே வியாபாரிகளின் கதிதான் ஆட்டம் கண்டு விடும். அதனால்தான் மக்களை நல்ல சினிமாவின் பக்கம் யாரும் அழைத்து செல்வதில்லை, ஆனால் ஜோன் ஆபிரஹாம் அந்த நிலைகளை உடைத்தெறிந்தார். நல்ல சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை உடைத்தெறிந்தார். நல்ல சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை தகர்த்தினார்.மக்களை நம்பினார், மக்களுக்கான மொழியில் அவரின் திரைப்படங்கள் மக்களிடம் பேசியது. மக்களின் அங்கீகாரத்தை பெற்றார். அதனால்தான் நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ,து போன்ற சினிமா கலைஞர்களும் அவர்களின் முயற்சிகளும் சுயேச்சையான படைப்புகளும் சினிமா முயற்சிகளும் நம்பிக்கை தர கூடியது. பெரிய முதலீடுகளில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் சினிமாவில் ,ல்லாத ஆன்ம பலம் ,ந்த சொற்ப முதலீடுகளில் உருவாக்கப்படும் சினிமாவில் ,ருப்பதை நம்மவர்கள் உணர வேண்டும். நல்ல சினிமா ஆன்மாவிலிருந்தும் வாழ்வின் ஆதாரத்திலிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். நு}று நாட்கள் ஓடும் ஒரு படத்தை நல்ல சினிமா என்று எப்படி வரையறுப்பது. 10 தினங்கள் ஓடும் ஒரு சிறந்த திரைப்படம் எப்போதும் சிறந்த படமாகவே ,ருக்கின்றது. ஆனால் 100 நாட்களில் ஓடிய திரைப்படம் மக்களின் மனதிலிருந்து மறக்கப்பட்டு விடுவதிலிருந்து அந்த 100 நாட்களின் வியாபார தந்திரம் நல்ல சினிமாவுக்கான ,டத்தை அடைய முடியாதபடிக்கு அழிந்து போகின்றது.
ஜோன் ஆபிரஹாம் பற்றி நான் நமக்கு அறிமுகம் செய்து எழுதுவதன் நோக்கம் கூட ,துதான். நமக்கான சினிமாவை, நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்க நினைக்கும் சக கலைஞர்கள், நண்பர்கள், தோழர்கள் நமக்கென்று சினிமா கலை பற்றியும் அதன் தனித்துவமான மொழி பற்றியும் சுயதேடலின் வழி கண்டறிந்து கொள்ள தனது முயற்சிகளை முடக்கி விட வேண்டும். நமக்கான சினிமாவை உருவாக்குவதில் சுயமான பிடிப்பும், நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.

சினிமா என்ற ஆவலில் நம்பிக்கையுடன் ,த்துறையில் காலடி எடுத்து வைக்கும் நம்மவர்களிடம் பெருமளவில் காணப்படும் குறைபாடு தமிழ் சினிமாவை போல் நாமும் ,ங்கு ஒரு திரைப்பட கலாசõரத்தை உருவாக்கி விட வேண்டும் என்று கனவு காண்பதுதான். அதனால் அவர்களின் சினிமாவில் தனித்துவம், சாரமும், கலை மனதின் தீராத வேட்கையும் தொலைத்தடிக்கப்படுகின்றது என்பதை ஏன் ,வர்கள் உணர்வதில்லை. தமிழக சினிமா பெரியளவில் பணம் புரளும் வர்த்தக லாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டதொரு துறை. அதில் மனிதனுக்கும் மனித உணர்வுகளுக்கும் அந்த சினிமாவில் எந்த வேøலயும் ,ல்லை, பணம் பணம் பணம்தான் அதன் தாரக மந்திரம்.



09

நம்மவர்கள் சினிமா மூலம் பணம் சம்பாதிக்க ஆசை கொள்வது என்பதெல்லாம் தவறு என்று நான் வாதாட வரவில்லை, பணம் புரளும் ,ந்த சினிமா துறையில் பணம், லாபம், வெற்றி என்பதுதான் உங்கள் ,லக்கு என்றால் தமிழகத்தில் அதை செய்வதுதான் புத்திசாலி தனம் என்பது என் கணிப்பு.
கை நிறைய பணம் ,ருக்குமாயின் தமிழகத்தில் அந்த பணத்தை முதலிட்டு சென்னை சினிமாவில் லாபத்தை ஈட்ட முடியும். நம்மவர்களில் பலர் ,ப்படியான முயற்சிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். செவ்வேல் தனது திரைப்படங்களை தமிழகத்தில்தான் முதலீடு செய்து உருவாக்குகிறார். அதுபோல வியாபார நோக்கில் திரைப்படத்தை உருவாக்க சிறந்த ,டம் சென்னைதான்.
நமக்கான சினிமா வெறும் பொருளாதாரம், லாபம், வெற்றி, ஆணிது ணிழூ ஏடிவ வகைகளில் நமக்கு எந்த விதத்திலும் ,ங்குள்ள சு10ழல் வாய்ப்பை தரப் போவதில்லை என்பதை நம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சினிமாவை வைத்து லாபம் சம்பாதிக்க முடியாத படிக்கு அதன் சந்தையை தமிழக சினிமா ஏற்கனவே கபளீகரம் செய்து விட்டபோது நாமும் அதன் பின்னே சென்று "லாபம்' சம்பாதித்து விட முடியாது என்ற உண்மையை நம்மவர்கள் உணர வேண்டும். ஆனால் பொருளாதார வெற்றி மட்டுமே சினிமாவின் உயிர்ப்பாக ,ருக்காது.
வியாபார ரீதியில் நாம் ,லங்கையில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை வைத்து வெற்றி பெற முடியாத அந்த ஒரே காரணத்தினால்தான், நான் முன் வைக்கும் "நல்ல சினிமா' என்ற கருத்தியலின் அடிப்படையில் சிறந்த சினிமாவை உருவாக்க படைப்பு ரீதியான திறனை பெறுவோம். நம்முடைய வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் பல்வேறு கலை நிர்மாணங்கள் அனைத்தும் ,ந்திய சாயலின் அடிப்படையிலும் வெகுசன, ஜனரஞ்சகம் என்ற அடிப்படையில் சிந்திப்பதனால்தான் நம்மவர்களின் முயற்சிகளை நம் நாட்டு மக்களே வெறுக்கிறார்கள். ,ங்கே நிறைய சந்தர்ப்பங்கள் ,ருக்கின்றன. ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் நம்மை வெளிப்படுத்த தவறியுள்ளோம் என்பதுதான் உண்மை. ஒப்பீட்டளவில் தமிழக நாளேடுகளை விட ,லங்கையின் நாளேடுகளில் தரமும் செய்திகளின் தன்மையும் உயர்வானது. அத்தோடு வார வெளியீடுகளின் தரம் தமிழக சிற்றிதழ்களின் தரத்துடன் ஒப்புநோக்கவல்லது. ,தில் நமக்கென்று ஒரு தனித்துவத்தை பேணி வருகின்றோம். ஆனால் சினிமா, எப்.எம். வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நமக்கென்று பார்வை ,ல்லை என்பதை கோமாளித்தனமான நடப்புகள் அம்பலப்படுத்துகின்றது. ஆனால் மக்களின் ரசனையை நாம் எந்த விதத்திலும் குறை கூற முடியாது. ,ந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் கல்வியறிவில் உயர்வான மாநிலம். அங்கு சாதாரண பெட்டி கடையிலும் தெருக்களிலும் தீவிர படிப்புக்கான சஞ்சிகைகள், கவிதைகள், நாவல்கள் என்ற ,லக்கியத்தை பார்க்க முடியும். ஆனால் நமக்கு பாலகுமாரனையும் ரமணிச் சந்திரனையும் ராஜேஷ் குமாரையும் சுஜாதா, லக்ஷ்மியை தவிர நாம் வேறென்ன படிக்கின்றோம், மிஞ்சி மிஞ்சி போனால் குமுதம், ஆனந்த விகடனை படிப்போம். ஆனால் நாமும் கேரள மாநிலத்தவர் போல படிப்பறிவில் கல்வியில் முன்னேறிய சமூகம், கேரளாவில் நல்ல சினிமாவிற்கான அலை எப்போதும் உண்டு. ஆனால் நாம் ,ந்திய, தமிழக பாதிப்புக்களினால் நமது சுயத்தை ,ழந்துள்ளோம் என்பது தான் உண்மை. அதனால்தான் நம் மத்தியிலிருந்து படைப்புணர்வுடன் வெளிவர வேண்டிய எத்தனையோ வளங்களை நாம் வெளிப்படுத்த முடியாமல் முடங்கி போயுள்ளோம். ,ந்த நிலையை மாற்றி அமைக்க நாம் முயல வேண்டும். நமது படைப்புணர்வுக்கு தடையாக அøமயும் முட்டுக்கட்டைகளை தாண்டி நாம் நமது படைப்புகளை நம் மண்ணில் மிகவும் உயிர்ப்புடன் படைக்க முனைய வேண்டும். அப்போதுதான் நமக்கான சிவிமாவின் பிறப்பை நாம் நம் மண்ணில் தரிசிக்க முடியும்.


10

சினிமாவை ஒரு அசல் தன்மையுடன் புரிந்து கொண்டு நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை ,ங்கே உருவாக்கும்போது அது லாபத்தை பெற்று தருவதோடு, சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் பெற்று தரும் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் நுட்பத்திலும் நடிப்பிலும் திரைக்கதை பிரதியாக்கத்திலும் மற்றும் பல்வேறு களங்களிலும் சிறந்ததொரு திரைப்படமாக நமது திரைப்படம் அமையும்போது நாம் நினைக்கும் அத்தனையும் நமக்கு கிட்டும், அப்போது நமக்கான சினிமாவும் சாத்தியமாகும். அதற்கு ஜோன் ஆபிரஹாமை போல் மகத்தான கலைஞனாக ,ருக்க வேண்டும் என்பதல்ல, வாழ்வை, சமூகத்தை அரசியலை தெளிவாகவும் மனசாட்சியுடனும் சினிமாவின் கண் கொண்டு வெளிப்படுத்தும் வரம் ,ருந்தால் போதும் நமக்கான சினிமா வெற்று பெறும். ஜோன் போன்றவர்களை நமது பயணத்திற்கு முன்னே வைத்து பயணிப்பது நமது ,லக்கை அடைவதற்கான ,லகுவான வழி, அத்தோடு அது நமக்கு உண்மையையும், நேர்மையையும் நோக்கி நம்மை அழைத்து செல்லுவதோடு நமக்கேயான அடையாளத்தையும் அது கட்டமைக்கும்.
"சினிமா தான் எனது மிகப் பெரிய பலவீனம். எனது மிகப் பெரிய சக்தி. சினிமாவின் அடிமை நான். எனக்கு வாழ்க்கையில் பெரிய ஆசைகள் எதுவுமில்லை. சினிமா எடுக்க முடிந்தால் போதும், என்பதே பிடிவாதம். சினிமாவிலிருந்து எனக்கு ஒரு சல்லிக் காசு கூட ,லாபம் வேண்டாம் எனது வாழ்க்கைத் தேவைகள் குறைவு. பட்டினி கிடந்தாலும் எனக்கு அங்கலாய்ப்பில்லை. பசியை ஜெயிக்க எனக்குத் தெரியும். படுத்துறங்க எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்துக்குக் கீழே படுத்துக் கொள்வேன். நான் ,யற்கையின் மைந்தன், புழுதியே எனக்கு ,தம். ஆனால் என்னைத் திரைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். எனக்கு வேண்டியது அது மட்டுமே. சினிமாதான் எனது வாழ்க்கை. அது ,ல்லையென்றால் நானுமில்லை.
ஜோன் சினிமாவை உயிர் மூச்சாக கொண்டிருந்தார், ஜோன் ஆபிரஹாம் என்ற மகா கலைஞனை ,ந்திய சினிமா என்றும் மறக்காது. அவர் சொந்த வாழ்வை போல மரணமும் அவரை அகாலமாக்கியது. 1987 ல் மே மாதம் 30 ஆம் திகதியன்று, நண்பர்களுடன் அதிகமாகக் குடித்துவிட்டு போதை அதிகமாகி மொட்டை மாடியில் ,ருந்து கீழே விழுந்து ,றந்து விடுகிறார். கிட்டதட்ட தற்கொலைக் கொப்பானது தான் அவருடைய ,றப்பு என்கின்றனர் அவரது நண்பர்கள்.

நன்றி: ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை (நு}ல்)

இலங்கை சிங்கள சினிமாவின் வரலாறு






















1901ம் ஆண்டில் போயர் (BOER) சிறைச்சாலையில் போர்க் கைதிகளுக்குத்
திரையிடப்பட்ட ஒரு மௌன செய்திச் சுருளே (NEWS REEL) இலங்கையில் (1972 வரை சிலோன்
என்றழைக்கப்பட்ட) திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். 1903ல் கொழும்பில் முதல்
திரையரங்கம் திறக்கப்பட்டது. 1945ல் ஆசியாவின் முதல் திரைப்படச் சங்கமாகக்
கருதப்படும் கொழும்பு திரைப்படச் சங்கம் தொடங்கப்பட்டது. இலங்கை திரைப்படத்
தயாரிப்பின் வரலாற்றில் மௌனப் படக்காலம் என்ற ஒன்று இல்லை.

1947ல் சிங்கள
மொழி உரையாடலோடு தயாரிக்கப்பட்ட கடவுனு பொறன்துவா (உடைந்த நம்பிக்கை) இலங்கையின்
முதல் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தென்னிந்தியாவின் சித்ரகலா மூவிடோன்
என்ற திரைநிறுவனத்திற்காக எஸ்.எம். நாயகம் என்ற ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட
நடிகர்-நடிகையரைக் கொண்டு ஏராளமான சிங்கள மொழி திரைப்படங்கள் தென்னிந்தியாவில்
தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள் இந்திய இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக்
கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதால் இப்படங்களின் மனோநிலை, உருவாக்கம்
மற்றும் வெளிப்பாட்டில் தென்னிந்தியாவின் பாதிப்புகளைக் கொண்டிருந்தன. கதை அமைப்பு
மற்றும் நடிப்பு வெளிப்பாட்டு முகைள் இரண்டிலும் தென்னிந்தியத் திரைப்படங்களின்
நேரடியான மறுபிரதிகளாகவே பல திரைப்படங்கள் இருந்தன. 1940களின் பிற்பகுதியில்தான்
திரைப்பட வர்த்தக தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பிரதான
நிறுவனங்கள், இலங்கை திரையரங்குகள், இலங்கை படப்பிடிப்பு நிலையங்கள் மற்றும்
இலங்கையின் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுயமான இலங்கை திரைப்படத்
தொழிற்சாலை உருவானது. இதன் பின் இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் மற்றும் இந்தித்
திரைப்படங்களின் ரசிகர்களாக இருந்தவர்கள் சிங்களத் திரைப்படங்களின் ரசிகர்களாக
மாறத் துவங்கினர்.

1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் அதையட்டி
ஏற்பட்ட தேசிய எழுச்சியும் இந்தியர்களின் ஆளுமையிலிருந்து சிங்களத் திரைப்படஙகள்
உருவாக வழிகோலின. 1951ல் சிறீசேனா விமலவீரா என்பவரால் தொடங்கப்பட்ட நவஜீவன்
படப்பிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) தயாரிக்கப்பட்ட பொடி புத்தா (இளையமகன்) என்ற
திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமா பிறப்பதற்கு அடித்தளமிட்டது.

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து
ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே
உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள்
இசையமைப்பாளர்கள்இ பாடகர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே
தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச்
சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக்
கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும் பங்கு
பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன
ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன்
படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில்
25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால்
உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது.
இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே
பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக
இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத்
திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தரஇ இன்னும் ஒரு படி மேலே போய்
வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள்இ ஒளிகளுடன் யதார்த்தமான
சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள்.
இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள்
உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

தங்களது
சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத்
திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ்
திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது
பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல
இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத்
துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும்
திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த
வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய
படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை
ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர்
முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும்
கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே
இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி
நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன்
என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன்
இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த்
திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில்
வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான
சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி
இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.


சுதந்திரம் பெற்ற புதிதில்
மக்களுக்கு அதைப் பற்றி அறிவுறுத்த செய்திப் படங்களையும் ஆவணப் படங்களையும்
தயாரிப்பதற்கென 1948ல் அரசு திரைப்படக் குழு நிறுவப்பட்டது. குறிப்பிடத் தகுந்த
அவற்றின் உண்மையான படைப்பாக்கத் திறனுக்காகவும், உயர்ந்த திரைப்பட உருவாக்கத்
தரத்திற்காகவும் பல அரசுப் படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றன.

எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர்கள் பலர் உருவாகி
வளர்ந்த நாற்றங்காலாக புகுரு இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக அரசு
திரைப்படக்குழு அரசின் நிரந்தர பிரச்சாரக் கருவியாக சுருக்கிய காரணத்தினால்
பிற்காலங்களில் அதன் கலைத்தரம் தாழ்ந்து போனது.

அரசு திரைப்படக் குழுவின்
வழிவந்த பிரபல திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பெரீஸின் முதல் திரைப்படமான
'ரேகாவா' (விதியின் கோடுஃ1956) சிங்கள சினிமாவின் முகத்தை நிரந்தரமாக மாற்றியது.
தொழில்முறை அல்லாத தேர்ச்சியற்ற கலைஞர்களையும் ஸ்டூடியோ அல்லாத வெளிப்புறக்களையும்,
படப்பிடிப்பில் இயற்கை ஒளியையும் அவர் பயன்படுத்தினார்.

முதல்முறையாக
மக்களும் அவர்களின் பண்பாடு மற்றும் சுற்றுச்சு10ழல் ஆகியவையும் யதார்த்தமாகத்
திரையில் சித்தரிக்கப்பட்டது. இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டு அதன் கவித்து மற்றும் நேர்மையான கதையாடலுக்காக சர்வதேச
விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

லெஸ்டரின் அடுத்த படமான 'கம்பெரலிய'
(கிராம பிறழ்வுஃ1963) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாகவும்
விமர்சன ரிதீயாகவும் உலக அளவில் வெற்றி பெற்றது. வியாபார சினிமாவின் ஒரு
மைல்கல்லாகப் பரிசீலிக்கப்பட்ட இத்திரைப்படம் இலங்கை சிங்கள சினிமா தெளிவான
பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகோலியது. 1965ல் புதுதில்லியில் நடைபெற்ற 3வது சர்வதேச
திரைப்பட விழாவில் இத்திரைப்படம் தங்கமயில் விருது பெற்றது.

1960களில்
'கம்பெரலிய' குறிப்பிடத்தகுந்த படங்களைத் தயாரிக்க ஏனைய திரைப்படக்
கர்த்தாக்களுக்கான புதிய பாதையையும் தரத்தையும் நிர்ணயம் செய்தது. அதற்கான சில
உதாரணங்கள்... தசக் சிதுவிலி (பு.னு.டு.பெரோ 1965) பரசுது மல் (காமினி பொன்சேகா
1966) சத் சமுதுரா (ஸ்ரீ குணசிங்கே 1966) மற்றும் ஹண்டே கதாவா ( (சுகந்தபால செனரத்
யாப்பா 1969) இப்படியான சினிமா போக்குகளை கம்பெரலிய திரைப்படம் உருவாக்கியது.

1970ல் யைமப்படுத்தப்பட்ட திட்டத்தை முன்மொழிந்த சோசலிசக் கட்சிகளின்
கூட்டணிக்குத் தலைமை தாங்கிய இலங்கை சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது
தேசிய திரைப்படக் கழகம் என்று அழைக்கப்படும் அரசு திரைப்படக் கழகத்தின் ஏகபோகக்
கட்டுப்பாட்டின் கீழ் திரைப்படத்துறை கொண்டுவரப்பட்டு தேசியமயமாக்கப்பட்டது. ஓர்
சுயமான இலங்கை திரைப்படத் துறையாக ஒழுங்கமைப்பதும், பாதுகாப்பதும் வளர்ப்பதுமே
ஆரம்ப கால லட்சியமாக இருந்த அதன் மூலம் பதினைந்து வருடங்களில் தரமான திரைப்படங்களை
உருவாக்கும் முயற்சிகளிலும், படைப்பாக்கத் திறன்களை வளர்ப்பதிலும் தனது இலக்கை
எட்டியது. ஆனால் 1980களின் இறுதியில் அதன் பரந்த, நீண்டகால விருப்பங்களும்
எதிர்பார்ப்புகளும் முழுமையடையவில்லை. திரைப்பட விநியோகத்தில் வரைமுறையற்று
ஈடுபட்டது போன்ற சில காரணங்களினால் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் ஒட்டுமொத்த
ஏகபோகமாக இருந்த சிங்கள திரைப்படத்துறை இலங்கை சினிமாவின் அழிவை துரிதப்படுத்தியது.

80களின் உள்நாட்டு இனவன்முறைகள் அழிவினால் சிங்கள திரைப்படத்துறை அழிவை
நோக்கி நகர்ந்த அதே தருணத்தில் 83ல் வெடித்த ஜூலை இனகலவரத்தினால் முகிழ்ந்துக்
கொண்டிருந்த இலங்கை தமிழ் திரைப்படத் துறையும் முற்றாக அழிந்து போனது. தமிழ் -
சிங்கள உறவின் பின்னலைப் போலவே இலங்கை தமிழ் திரைப்படத்துறையும் சிங்கள-தமிழ்
கலைஞர்களின் ஒன்றிணைவோடு செயல்பட்டதை இங்கே நினைவு படுத்த வேண்டும்.

இப்படியான உள்நாட்டு அரசியல் முரண்களில் நசுவுற்ற திரைப்படத்துறை பின்
ஏற்பட்ட சமூக மாற்றத்தின் வழி தன்னை நிலை நிறுத்த போராடியது.

ஐரோப்பிய
மற்றும் ஜப்பானிய முன்னணிப் படங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் காலமாகவும், அழகியல்
வடிவமாகவும் தொழிலாகவும் சினிமாவைப் பற்றிய விவாதம் தீவிரமாக எழுத்து, சோதனை
முயற்சி ஆகியன நிகழ்ந்த ஓர் முக்கியமான காலகட்டமாகவும் 19709களின் பத்தாண்டுகள்
இருந்தன.

இக்கால சு10ழலில் புதிய போக்குகள் (பாணிகள்) உருவாயின. வளர்ந்து
வந்த சினிமா மொழியின் படைப்பாக்க சாத்தியப்பாடுகளையும், நடைமுறையையும்
புரிந்துக்கொண்ட பல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் குறிப்பிடத் தகுந்த
திரைப்படங்களைத் தயாரித்தனர்.

மஹாகாம சேகர, ரஞ்சித் லால், னு.டீ.
நிஹல்சிங்கே, மற்றும் தர்மசேன பதிராஜா ஆகியோர் இத்தகைய இயக்குனர்களில் சிலர்.

மூன்றாம் சினிமா என்ற கருத்தாக்கம், சமூக யதார்த்தவாதம் என்ற பாணி
இரண்டையும் உள்ளடக்கிய மாற்று திரைப்படத் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இலங்கை
திரைப்பட ரசிகர்களுக்கு அஹாஸ் கவ்வா (1974) பேம்பரு அவித் (1978) போன்ற
திரைப்படங்கள் ஒருசேர அறிமுகப்படுத்தின.

மேலும் 1970களின் விவாதத்திற்குரிய
திரைப்பட கர்த்தாக்களாக இலங்கை சினிமாவின் இன்றைய பெரும்பாலான இயக்குனர்களால்
பரிசீலிக்கப்படுபவர்கள் ர்.னு. பிரேமரத்னே (சிகுருலியா 1975) வசந்த ஒபயசேகர
(வெஸ்கத்தோ 1970) மற்றும் சுமித்ரா பீரீஸ் (கேஹீனு லமாய் 1978) ஆகியோரே.

பெண்களை வலிமையான கதாபாத்திரங்களாகவும், நேர்மையாகவும், சித்தரித்தற்காக
சுமித்ரா பீரீஸ் என்ற பெண் இயக்குனரின் திரைப்படங்கள் முன்னோடியாகக்
கருதப்படுகின்றன.

1980களில் பிரபலமான இயக்குனர்கள் தங்களின் படைப்புப்
பாணியில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தபொழுது, இப்பத்தாண்டுகளில் தரமான இரு
இயக்குனர்களாக தர்மசிறி பண்டாரநாயகேயும், திஸ்ஸா அபேசேகராவும் உருவாகி வளர்ந்தனர்.

லேட்டரின் விற்காயா (1987) இப்பத்தாண்டுகளின் விவாதத்திற்குரிய திரைப்படம்
எனலாம். 1980களின் இறுதியிலும் 1990களிலும் தேசிய திரைப்படக் கழகத்தின்
கட்டுப்பாடான விநியோகக் கொள்கைகளாலும் ஏராளமான தரம் தாழ்ந்த திரைப்படங்களைத
தயாரித்தாலும் இலங்கை திரைப்படத்துறை அழிவை சந்திக்க நேர்ந்தது. திரைப்படத்
தயாரிப்பில் முதலீடு செய்வது குறைந்து போனது. தொழில்நுட்பக் கலைஞர்களும்,
நடிகர்களும் மிகவும் லாபகரமான தொழில் கூடாரமாக இருந்த தொலைக்காட்சி நாடகங்களில்
பணியாற்ற நுழைந்தனர். சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் நல்ல தரமானதொரு படைப்பாக்கமாக
இக்கால கட்டங்களில் வளர்ந்ததை குறிப்பிட வேண்டும்.

இருந்த போதும் 1990களில்
பிரசன்ன விதானகே, சுதத்த தேவப்ரியா, பூதி கீர்த்திசேனா, ஜேக்கன் அந்தோனி, மோகன்
நியாஸ், லிண்டன் சோமகே, அசோகா ஹண்டகாமா, உதயகாந்தா வர்ணசு10ர்யா மற்றும் சோமரத்னே
டிஸ்ஸநாயகே போன்ற சில சிறந்த இளைய தலைமுறை இயக்குனர்கள் சிங்கள திரைப்பட துறையில்
உருவாகினார்கள்.

இவர்களில் 'பிரசன்ன விதானகே' தனது விருது பெற்ற
திரைப்படங்களான பவரு வால்லலு (சுவருக்குள் 1977) மற்றும் புரகண்ட கலுவர (ஒரு
புவர்ணமியின் மரணம் 1997) போன்றவற்றிக்காக சர்வதேச அளவில் மிகுந்த பாராட்டுக்களைப்
பெற்றுள்ளனர். இதே போல் அசோகா ஹதகாமா தனது வுர்ஐளு ஐளு ஆலு ஆழுழுN என்கிற சிங்கள
சினிமாவிற்காக உள்நாட்டில் சர்சைக்குரிய இயக்குனராகவும், பௌத்த பேரினவாத போக்கை
எதிர்க்கும் இயக்குனராக இலங்கை சிங்கள சினிமாவில் கருதப்படும் சிறப்பானதொரு
இயக்குனராக கருதப்படுகிறார்.

தேசிய திரைப்படக் கழகத்தின் ஏகபோகக்
கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜனவரி 2000ல் திரைப்படத்துறை
தாராளமயமாக்கப்பட்டது. இருந்த போதும் தேசிய திரைப்படக் கழகம் அதன் வழக்கமான
செயல்பாட்டில் இயங்கி வருகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக பல்வேறு வரி
சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு திரைப்படங்களை இறக்குமதி மற்றும்
விநியோகம் செய்து கொள்ள தனியார் துறைக்கும் திறந்த அனுமதி வழங்கப்பட்டது.

ஏனைய திரைப்படத்துறை தயாரிப்பாளர்களின் மத்தியில் ஒரு கூடுதல் முன் முயற்சி
மற்றும் போட்டி மனப்பான்மையில் இயங்கும் தேசிய திரைப்படக்கழகம் இலங்கை சிங்கள
சினிமாவுக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்தாலும் இலங்கை திரை
வரலாற்றில் தனி இணையாக வளர்ந்த இலங்கை தமிழ் சினிமா வளர்வதற்கு தேசிய திரைப்பட
கழகம் எவ்விதமான முயற்சியும் செய்யாதது வருந்த செய்கின்றது.

சிங்கள
சினிமாவுக்கு இணையாக தனி தன்மையோடு வளர்த்தெடுக்க பட வேண்டிய ஈழ சினிமாவுக்கு
இலங்கை அரச எவ்விதமான அக்கறையும் காட்டாதது இன முரண்பாட்டின் வெளிப்பாடாகவே கருத
வேண்டியிருக்கின்றது.

இன்றைய புதிய இலங்கை அரசியலில் சிங்கள சினிமாவுக்கான
அத்தனை வேர் தன்மையோடும் தமிழ் சினிமாவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே
இலங்கை கலைஞர்களின் ஒட்டுமொத்த அபிலாசையாகும். அது மலர இருக்கும் புதிய ஈழ
அரசியலின் கவன மையத்தில் ஒரு அனுசரணையாக கருதப்பட்டாலே இலங்கையின் சினிமா இன்னும்
பல அரிய சாதனைகளை நிகழ்த்தும் களமாக மலரும்.